ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னையில் ஒரே நாளில் 8,704 போக்குவரத்து விதிமீறல்கள்; ரூ.7.65 லட்சம் அபராதம் வசூல்!

சென்னையில் ஒரே நாளில் 8,704 போக்குவரத்து விதிமீறல்கள்; ரூ.7.65 லட்சம் அபராதம் வசூல்!

போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முறையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அக்டோபர் 31ஆம் தேதி விதிமீறல் அற்ற நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மாநகரின் பல்வேறு இடங்களில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்தச் சோதனையின்போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக ஒரே நாளில் மொத்தம் 8,704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ.7.65 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.