ஆதார் இ-மெயில் முகவரி புதுப்பிக்க டிசம்பர் 31 வரை கட்டணம் இல்லை!

ஆதார் அட்டையில் புதிய இ-மெயில் முகவரியை இணைப்பது அல்லது ஏற்கெனவே பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரியை மாற்றுவது இனி இலவசமாக மேற்கொள்ளலாம். இதற்காக இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.75 கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இந்த புதிய சலுகையால் ஆதார் பயனர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை எந்தவித கட்டணமும் இல்லாமல் புதுப்பித்துக்கொள்ள முடியும். இருப்பினும், இந்த கட்டண விலக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச சேவையைப் பெற விரும்புவோர் UIDAI-யின் அதிகாரப்பூர்வ ஆதார் மொபைல் செயலி மூலமாக மட்டுமே மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்க வேண்டும். பிற வழிகளில் மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புகளுக்கு இந்த சலுகை பொருந்தாது என்பதால், பயனர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் செயலி மூலம் தங்களது மின்னஞ்சல் விவரங்களை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.




கருத்துகள் (0)