ஜியோ அறிமுகப்படுத்திய ஹேப்பி நியூ இயர் 2.0 திட்டங்கள் ரூ.15 முதல் அன்லிமிடெட் டேட்டா சலுகைகள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கும் வகையில் ‘ஹேப்பி நியூ இயர் 2.0’ என்ற புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 24 முதல் அமலுக்கு வந்துள்ள இந்தத் திட்டங்களில் அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா வசதியுடன் பல்வேறு டிஜிட்டல் சேவைகளும் வழங்கப்படுகின்றன.
ரூ.3,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருடாந்திர திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 4ஜி, 5ஜி டேட்டா வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜியோ ஹாட்ஸ்டார், ஜியோ டிவி, 50 ஜிபி கிளவுட் சேமிப்பகம் மற்றும் 12 மாத கேன்வா ப்ரோ சந்தா உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
மாதம் ரூ.399 செலுத்தும் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகள், 4ஜி மற்றும் 5ஜி டேட்டா வசதி, ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா உள்ளிட்ட பலன்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து ரீசார்ஜ் செய்யாமல் குறுகிய காலத்திற்கு டேட்டா தேவைப்படுபவர்களுக்காக ரூ.15 மற்றும் ரூ.25 விலைகளில் பிரத்யேக 5ஜி டேட்டா பேக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் அதிக டேட்டா பயன்படுத்துவோருக்காக ரூ.50 விலையில் நைட் டேட்டா பேக் வழங்கப்படுகிறது. இந்த பேக்கில் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். புதிய திட்டங்கள் மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ற ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.




கருத்துகள் (0)