ஜியோ 10வது ஆண்டு கொண்டாட்டம் ரூ.399 மற்றும் ரூ.3,999 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

ஜியோ நிறுவனம் தனது 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கும் வகையில் 'Happy New Year 2.0' என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டங்கள் ரூ.399 மற்றும் ரூ.3,999 என இரண்டு கட்டணங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரூ.399 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையிலும், ரூ.3,999 திட்டம் 365 நாட்கள் பயன்பாட்டிற்கும் வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்களில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் அழைப்புகளுடன் Canva Pro, JioHotstar சந்தா உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மேலும், குறுகிய காலத்திற்கு 5G சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக புதிய Add-on பேக்குகளையும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. ரூ.15 செலுத்தி ஒரு நாள் மற்றும் ரூ.25 செலுத்தி இரண்டு நாட்கள் பயன்படுத்தக்கூடிய இந்த பேக்குகள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)