வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

EPF கணக்கில் இருந்து UPI மூலம் பணம் எடுக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

EPF கணக்கில் இருந்து UPI மூலம் பணம் எடுக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளும் புதிய வசதி வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

இதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய பணம் எடுக்கும் முறையில் BHIM செயலி பயன்படுத்தப்பட உள்ளது.

 

சோதனை நடவடிக்கையின் போது 102 EPF சந்தாதாரர்களின் பணம் எடுக்கும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மொத்தம் சுமார் ரூ.5 லட்சம் அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

 

இந்த வசதி அறிமுகமானதும், EPF கணக்கில் இருந்து குறைந்தபட்சம் ரூ.1,000 பணம் எடுக்க அனுமதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் பணம் எடுக்கும் நடைமுறை மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.