ஆட்சியர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை தவெக எம்எல்ஏவை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆட்சியர் நான்கு மாதங்களுக்கு முன்பே புகார் அளித்திருந்தும், அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பாதுகாப்பாக இருந்ததாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மகளிர் ஆணையம் தலையிட்டதோடு, நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் புகார் பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், புகார் விவகாரத்தை மறைத்ததாகக் கூறப்படும் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.




கருத்துகள் (0)