செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.