சென்னையில் நாளை 2வது முதலீட்டாளர்கள் மாநாடு 85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் 2-வது வெற்றி தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நாளை (நவம்பர் 25) சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் சுமார் 85 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது மாநாட்டிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டின் மூலம் புதிய முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)