செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
அரசியல்

கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தவெக எம்எல்ஏ செல்போனை பறிமுதல் செய்ய போலீஸ் திட்டம்!

கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தவெக எம்எல்ஏ செல்போனை பறிமுதல் செய்ய போலீஸ் திட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

பறிமுதல் செய்யப்படும் செல்போனை சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி, அதில் உள்ள தகவல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு புகார் தொடர்பான விசாரணையில் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும், இந்த விவகாரத்தில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டம் 2013-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகாரின் தன்மை மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.