அடிக்கடி மறதி ஏற்படுகிறதா? மூளை மந்தநிலைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்!

ஒரு வேலையில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் போவது, சிந்தனையில் தெளிவின்மை, அடிக்கடி மறதி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் ‘பிரைன் ஃபாக்’ (Brain Fog) என அழைக்கப்படுகின்றன. போதிய தூக்கமின்மை, தொடர்ச்சியான மன அழுத்தம், நீண்ட நேரம் மொபைல் மற்றும் கணினித் திரைகளைப் பார்ப்பது, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
மூளையின் செயல்பாட்டைச் சீராக வைத்திருக்க தினமும் போதுமான நேரம் தூங்குவது, இடையிடையே ஓய்வெடுப்பது, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்கள் உதவலாம். இருப்பினும், பிரைன் ஃபாக் அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தாலோ அல்லது அன்றாடச் செயல்பாடுகளைப் பாதித்தாலோ மருத்துவரை அணுகுவது அவசியம். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.




கருத்துகள் (0)