அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுகிறதா? அலட்சியம் வேண்டாம்.. இந்தக் காரணங்கள் இருக்கலாம்!

அடிக்கடி தலைசுற்றல் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ரத்த அழுத்தம் குறைவது, உடலில் நீர்ச்சத்து குறைதல், ரத்த சோகை போன்ற பாதிப்புகள் தலைசுற்றலை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், உள்செவியில் ஏற்படும் சமநிலைக் கோளாறுகள், போதிய தூக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தம் ஆகியவையும் சிலருக்குத் தலைசுற்றல் உணர்வை உண்டாக்கலாம்.
தலைசுற்றல் அடிக்கடி ஏற்பட்டாலோ, நீண்ட நேரம் நீடித்தாலோ அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவரை அணுகி, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம். தலைசுற்றலுடன் மயக்கம், நெஞ்சுவலி, பேச்சுத் தடுமாற்றம் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் பலவீனம் ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.




கருத்துகள் (0)