வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கள்ளக்குறிச்சியில் வயல்வெளியில் மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சியில் வயல்வெளியில் மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே வயல்வெளியில் கட்டைப்பைக்குள் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை, கடந்த நவம்பர் 19ஆம் தேதி மீட்கப்பட்டது. பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் குழந்தை அங்கு விடப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

வயல்வெளியில் கிடந்த குழந்தையை மீட்ட போலீசார், உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

தற்போது குழந்தையின் உடல்நிலை தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையை வயல்வெளியில் விட்டுச் சென்றது யார், எந்த சூழலில் இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.