வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கூட்டுறவு நகைக்கடன் உச்சவரம்பு குறைப்பு.. கிராமுக்கு ரூ.9,000 ஆக நிர்ணயம்!

கூட்டுறவு நகைக்கடன் உச்சவரம்பு குறைப்பு.. கிராமுக்கு ரூ.9,000 ஆக நிர்ணயம்!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது ரூ.9,000 ஆக மாற்றப்பட்டுள்ளது.

 

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி, கிராமுக்கு ரூ.7,000 ஆக இருந்த கடன் வரம்பு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, கடன் வழங்கும் தொகையை மீண்டும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அடமானமாக வைக்கப்படும் நகையின் தற்போதைய சந்தை மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதிக தொகைக்கு நகைக்கடன் பெற்றவர்கள், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

 

கடன் தொகையில் ஏற்பட்ட மாற்றத்திற்கேற்ப கூடுதல் பணத்தை செலுத்தத் தவறினால், அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகள் ஏலத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதால், கடன் பெற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.