போரூர் அருகே காரில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் தனியார் நிறுவன ஊழியர் கைது!

சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே சர்வீஸ் சாலையில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா, போதைப்பொருள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் சோதனையின்போது காரில் இருந்து 2.5 கிலோ கஞ்சா, 3 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 61 மதுபாட்டில்களை கைப்பற்றினர். இதையடுத்து, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகரன் (28) என்பவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், பெங்களூருவில் இருந்து போதைப்பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், வார இறுதி நாட்களில் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் விருந்துகளில் பங்கேற்பவர்களுக்கு ஆர்டரின் அடிப்படையில் இவற்றை விநியோகிக்க திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)