திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அதிமுகவில் மீண்டும் அதிருப்தி வெடிப்பு? வேலுமணி, சி.வி.சண்முகத்தை நீக்க இபிஎஸ் ஆலோசனை?

அதிமுகவில் மீண்டும் அதிருப்தி வெடிப்பு? வேலுமணி, சி.வி.சண்முகத்தை நீக்க இபிஎஸ் ஆலோசனை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் தேர்தல் தோல்விகள், தலைமை மீதான அதிருப்தி மற்றும் தவெக அரசுக்கு ஆதரவளித்த விவகாரங்கள் உள்ளிட்டவை இந்த மோதலுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

 

இந்தச் சூழலில், இரு முன்னாள் அமைச்சர்களையும் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிமுக தலைமை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.