திருமணமான 11 நாட்களில் புதுமணப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த அஜின் நடேசனின் மனைவி ஜிஷா, திருமணமான 11 நாட்களிலேயே வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஜிஷாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவரது முதல் கணவர் சரத், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். முதல் திருமணத்தின் மூலம் ஜிஷாவுக்கு 8 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணமாகி 11 நாட்களிலேயே புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)