கனமழை எச்சரிக்கை எதிரொலி.. சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (நவம்பர் 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இன்று நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)