சென்னை நகைக்கடையில் 80 சவரன் நகைகள் திருட்டு: ராஜஸ்தானில் ஊழியர் உட்பட 2 பேர் கைது!

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் இருந்து 80 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில், கடை ஊழியர் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்துள்ளனர். ஹரீஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தரம்சிங் என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி பட்டறைக்குக் கொடுத்தனுப்பப்பட்ட 80 சவரன் நகைகளுடன் அவர் மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தேடுதல் நடத்திய போலீசார், சம்பவம் நடந்த 13 நாட்களுக்குப் பிறகு தரம்சிங் மற்றும் அவருடன் தொடர்புடைய மற்றொரு நபரைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளனவா என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.




கருத்துகள் (0)