திங்கள், அக்டோபர் 19, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா மீது நகை பறிப்பு புகார்: கான்ட்ராக்டருக்கு 2-வது முறையாக சம்மன்!

இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா மீது நகை பறிப்பு புகார்: கான்ட்ராக்டருக்கு 2-வது முறையாக சம்மன்!

 

 

இன்ஸ்டாகிராம் பிரபலமான மதுமிதா தன்னிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றதாகக் கான்ட்ராக்டர் பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் புகார் தொடர்பாகப் பேச்சிமுத்துவிடம் விளக்கம் பெற போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

முதற்கட்டமாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு அவர் ஆஜராகாததால், தற்போது இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சிமுத்து விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு, மதுமிதாவையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.