உதகை மலை ரயில் சேவை மேலும் 4 நாட்களுக்கு ரத்து; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

உதகை மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் பாதிக்கப்பட்ட உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் போக்குவரத்து தொடர்ந்து முடங்கியுள்ளது. கடந்த 9 நாட்களாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சீரமைப்புப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மலை ரயில் சேவை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மலை ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.




கருத்துகள் (0)