சென்னையில் கனமழையால் ஆயுதபூஜை விற்பனை மந்தம்! பொரி, அவல் விலை 30% வரை உயர்வு!

சென்னையில் அக்டோபர் 17ஆம் தேதி இரவு பெய்த கனமழையால் ஆயுதபூஜைக்கான பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் மழைநீர் வடிந்திருந்தாலும், பல இடங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து வியாபாரம் மந்தமடைந்துள்ளது. இதனால் பண்டிகைக் கால விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பொரி மற்றும் அவல் விலைகள் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மழை காரணமாக விற்பனை குறைந்துள்ளதுடன், விலையேற்றமும் வாடிக்கையாளர்களின் வாங்கும் அளவைப் பாதிப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.




கருத்துகள் (0)