செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னையில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்! நவம்பர் 4, 5-ல் விநியோகம்!

சென்னையில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்! நவம்பர் 4, 5-ல் விநியோகம்!

சென்னையில் வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், அவர்களது வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னையின் 19 மண்டலங்களிலும் வரும் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்த விநியோகப் பணி நடைபெற உள்ளது.

 

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 1,346 நியாயவிலைக் கடைகளின் பணியாளர்கள் மூலமாக, தகுதியான பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.