திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
சினிமா

சிம்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் பேசுவதை ஓரக்கண்ணால் பார்த்த நெல்சன் வைரலான புகைப்படம்!

சிம்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் பேசுவதை ஓரக்கண்ணால் பார்த்த நெல்சன் வைரலான புகைப்படம்!

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சந்தித்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது மூவரும் ஒன்றாக நின்று உரையாடிய காட்சி தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி நின்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார், மூவரையும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த தருணம் புகைப்படமாக பதிவாகியுள்ளது. இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், சிம்பு, நயன்தாரா ஆகியோரின் பழைய காதல் விவகாரத்தை நினைவுபடுத்தி, முன்னாள் காதலர்கள் பேசுவதை நெல்சன் உன்னிப்பாக கவனிக்கிறாரே என பல்வேறு நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.