ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
சினிமா

ஹாலிவுட் நடிகர் அலெக்சாண்டர் ஹாஸ்கின் கடலில் குதித்து உயிரிழப்பு!

ஹாலிவுட் நடிகர் அலெக்சாண்டர் ஹாஸ்கின் கடலில் குதித்து உயிரிழப்பு!

நெட்பிளிக்ஸில் வெளியான 'யூ' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் அலெக்சாண்டர் ஹாஸ்கின் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் சாண்டா மோனிகா பகுதியில் உள்ள கப்பல் பாலத்திலிருந்து அவர் கடலில் குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடலில் விழுந்த அவரை கடலோர காவல்படையினர் மீட்டு, உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இதற்கிடையில், சம்பவத்திற்கு முன்னதாக அவர் ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். சம்பவத்தின்போது நடிகர் தனியாகவே இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது மரணம் தொடர்பான தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.