திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
சினிமா

த்ரிஷா பெயரில் நெல்லையில் புதிய நற்பணி இயக்கம் தொடக்கம்!

த்ரிஷா பெயரில் நெல்லையில் புதிய நற்பணி இயக்கம் தொடக்கம்!

நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் நெல்லையில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான லோகோ மற்றும் கொடி அறிமுக விழா நாளை காலை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

த்ரிஷாவின் பெயரை பயன்படுத்தி இந்த இயக்கம் தொடங்கப்படுவதால், அவர் அரசியலில் நுழையப் போகிறாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த நற்பணி இயக்கம் நடிகை த்ரிஷாவின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் தொடங்கப்படுகிறதா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், தனக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக த்ரிஷா தெரிவித்திருந்தார். தற்போது அவரது பெயரில் புதிய இயக்கம் தொடங்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.