சின்ன வெங்காயம் ரூ.70 குறைவு காய்கறி விலை சரிவால் மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தின் பல்வேறு காய்கறி சந்தைகளில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த காய்கறிகளின் விலை தற்போது சரிவை சந்தித்துள்ளதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.230 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.70 குறைந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், கிலோ ரூ.80-க்கு விற்பனையான பீன்ஸ் தற்போது பாதியாகக் குறைந்து ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கத்திரிக்காய் விலையிலும் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. முன்பு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய், தற்போது ரூ.30-க்கு கிடைக்கிறது. ஒரே நேரத்தில் பல காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால், சந்தைகளில் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக குடும்பத்தின் அன்றாட உணவுச் செலவுகளை கவனித்து வரும் இல்லத்தரசிகளுக்கு இந்த விலை குறைவு ஓரளவு உதவியாக அமைந்துள்ளது.




கருத்துகள் (0)