வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

டிசம்பர் 1 முதல் விரிவாக்கம் செய்யப்படும் தயுமானவர் திட்டம் 2.27 லட்சம் குடும்பங்களுக்கு பயன்!

டிசம்பர் 1 முதல் விரிவாக்கம் செய்யப்படும் தயுமானவர் திட்டம் 2.27 லட்சம் குடும்பங்களுக்கு பயன்!

தமிழகத்தில் ரேஷன் பொருட்களை நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் தயுமானவர் திட்டம், வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே கடைகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வாங்க முடியாத 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளிலேயே பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

தற்போது இந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட விரிவாக்கத்தின் கீழ், திருநங்கைகள், கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட கூடுதல் பிரிவினருக்கும் அவர்களது வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் கொண்டு சென்று வழங்கப்பட உள்ளன. இதனால் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்குவதில் சிரமம் உள்ளவர்கள் பயனடைவார்கள்.

 

இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 2.27 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 4.89 லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர். இதன் மூலம் ரேஷன் பொருட்களை பெறுவதற்கான சிரமம் குறைந்து, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டிலேயே அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.