ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சொத்து தகராறில் விபரீதம்! நாங்குநேரியில் தாத்தாவைக் கொலை செய்த பேரன் கைது!

சொத்து தகராறில் விபரீதம்! நாங்குநேரியில் தாத்தாவைக் கொலை செய்த பேரன் கைது!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சொத்து தொடர்பான தகராறு காரணமாக பேரனே தனது தாத்தாவைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளவாய் என்ற முதியவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தினரிடையே சொத்துகளைப் பிரிப்பது தொடர்பாகப் பிரச்சினை நீடித்து வந்ததாகத் தெரிகிறது.

 

இந்தச் சூழலில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பேரன், தாத்தாவைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக பேரனைக் கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.