தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்களுக்கு மெமோ.. பணி நீக்கம் எச்சரிக்கை!

நவம்பர் 1-ம் தேதி எவ்வித முன் அனுமதியும் பெறாமல் தமிழகம் முழுவதும் தன்னிச்சையாக டாஸ்மாக் கடைகளை மூடிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நிர்வாகம் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், மெமோவுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தவறினால் பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)