இன்று கடைசி டி20 போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை முடிக்குமா இந்தியா?

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் இன்று (நவம்பர் 1) நடைபெறுகிறது. நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக நிறைவு செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. மறுபுறம், 4-வது போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, அதே உத்வேகத்துடன் கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




கருத்துகள் (0)