சென்னையில் இன்று தொடங்குகிறது சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி.. ரூ.2.69 கோடி பரிசுத்தொகை!

சென்னையில் 3-வது முறையாக நடைபெறும் சர்வதேச பெண்கள் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று (நவம்பர் 2) நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் தொடங்குகிறது. நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் களமிறங்குகின்றனர்.
இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.69 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.35.5 லட்சமும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.13 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.




கருத்துகள் (0)