ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
இந்தியா

“இப்படியொரு கோழைத்தனமான பிரதமரை நாடு பார்த்ததில்லை!” – மோடியை கடுமையாக விமர்சித்த CJP தலைவர்!

“இப்படியொரு கோழைத்தனமான பிரதமரை நாடு பார்த்ததில்லை!” – மோடியை கடுமையாக விமர்சித்த CJP தலைவர்!

 

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்றபோது போலீசாரால் தடுத்து வைக்கப்பட்ட CJP தலைவர் அபிஜீத் திப்கே, விடுவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டம் நடத்த அபிஜீத் திப்கே சென்றுள்ளார். அப்போது அவரை போலீசார் தடுத்து வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இதுபோன்ற கோழைத்தனமான, மிரட்டல் போக்கைக் கொண்ட பிரதமரை நாடு இதுவரை பார்த்ததில்லை” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் மற்றும் பிரதமர் மோடி குறித்த அவரது விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.