ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
இந்தியா

டெல்லியில் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டம்! போராட்டக்காரர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீசார்!

டெல்லியில் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டம்! போராட்டக்காரர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீசார்!

 

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் முக்கியப் பகுதியான கன்னாட் பிளேஸில் உள்ள இன்னர் சர்க்கிள் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது அங்கிருந்து வெளியேற மறுத்த போராட்டக்காரர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் கன்னாட் பிளேஸ் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.