இரவு விடுதியில் பெண்ணுக்கு கொடூரத் தாக்குதல்: 7 பேர் கைது!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள கானபாரா பகுதியில் செயல்படும் இரவு விடுதியில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களையச் செய்து அவரைத் தாக்கித் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கவனத்தைப் பெற்றது. இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், விடுதி மேலாளர் மற்றும் நிகழ்ச்சி மேலாளர் உள்ளிட்ட 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)