திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
உலகம்

இறந்துவிட்டதாகக் கருதி சவப்பெட்டியில் வைத்த சிறுமி! 8 மணி நேரத்திற்குப் பிறகு நடந்த அதிசயம்!

இறந்துவிட்டதாகக் கருதி சவப்பெட்டியில் வைத்த சிறுமி! 8 மணி நேரத்திற்குப் பிறகு நடந்த அதிசயம்!

 

 

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், நெஞ்சுவலியால் மயக்கமடைந்த 15 வயது சிறுமியை அவரது தந்தை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், வழியிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாகக் கருதிய அவர், மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று சவப்பெட்டியில் வைத்துள்ளார். இதையடுத்து, உறவினர்கள் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

 

இந்நிலையில், சுமார் 8 மணி நேரத்திற்குப் பிறகு சவப்பெட்டியில் இருந்த சிறுமி திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட குடும்பத்தினரும் அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்ததுடன், பின்னர் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சிறுமியின் உடல்நிலை மற்றும் சம்பவத்தின் மருத்துவப் பின்னணி குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.