செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
உலகம்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 பேர் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 பேர் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழப்பு!

 

 

ஜம்மு காஷ்மீரின் கிருஷ்ணா காட் செக்டர் வழியாகப் பாகிஸ்தானில் இருந்து 4 பேர் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்புப் படையினர் அமைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி நால்வரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

உயிரிழந்தவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த முகமது இஸ்திக், லஷ்கர்-இ-தொய்பா தளபதி முகமது பைசன், முகமது வாகஸ் மற்றும் முகமது ஆசிப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஊடுருவல் முயற்சி தொடர்பாக மேலதிக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.