செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
உலகம்

மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு அக்டோபர் 23 முதல் தொடக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு அக்டோபர் 23 முதல் தொடக்கம்!

 

 

மத்திய கிழக்கில் நிலவிய போர் சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், அக்டோபர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

 

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும், இந்தத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாகக் கணக்கிடப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், பாடவாரியான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையம் தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.