இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு!

இந்திய பங்குச்சந்தையில் இன்று ஏற்பட்ட கடுமையான சரிவு முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாள் வர்த்தகத்தில் சந்தையின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக குறைந்ததால், முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,483 புள்ளிகள் சரிந்து 82,435 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 450 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25,349 புள்ளிகளில் முடிவடைந்தது.
சந்தையில் பங்குகளின் விலை உயர்ந்திருந்த நிலையில், முதலீட்டாளர்கள் பலர் தங்களிடம் இருந்த பங்குகளை விற்று லாபத்தை உறுதி செய்ய முயன்றது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து, ஒட்டுமொத்த சந்தையும் சரிவை சந்தித்தது.




கருத்துகள் (0)