இந்தியாவின் முதல் தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணை JWALA MK-1 வெற்றிகரமான சோதனை!

இந்தியாவின் முதல் தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு நுண் ஏவுகணை அமைப்பான ‘JWALA MK-1’, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த நவீன பாதுகாப்பு அமைப்பு, எதிரி ட்ரோன்களைக் கண்டறிந்து அவற்றைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை அமைப்பு சுமார் 2 முதல் 5 கி.மீ. தொலைவிலும், 50 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரம் வரையிலும் செயல்படும் ட்ரோன்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. நவீன போர்க்களங்களில் அதிகரித்து வரும் ட்ரோன் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் நோக்கில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை வெற்றி, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதுடன், வெளிநாட்டு பாதுகாப்பு உபகரணங்களை சார்ந்திருப்பதைக் குறைக்கும் முயற்சிக்கும் இந்த அமைப்பு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)