ஜியோ-பிபி பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! லிட்டருக்கு ரூ.5 வரை அதிகரிப்பு!

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஜியோ-பிபி (Jio-bp) பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3-ம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விலை மாற்றம் வாகன ஓட்டிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கெனவே தனியார் எரிபொருள் நிறுவனமான நயாரா எனர்ஜி தனது பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜியோ-பிபி பங்க்குகளிலும் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தனியார் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் வாகன ஓட்டிகளின் செலவுகள் அதிகரிக்கக்கூடும். குறிப்பிட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விலைகளை சம்பந்தப்பட்ட பங்க்குகளில் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.




கருத்துகள் (0)