UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணமா? 2027 ஜனவரி வரை ஒத்திவைப்பு!

ரூ.2,000-க்கு மேலான சில வணிக UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் 2027 ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய நடைமுறை அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வரவிருந்த நிலையில், தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சாதாரணமாகப் பொதுமக்கள் மேற்கொள்ளும் தனிநபர் UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை. வணிகர்களுக்குப் பணம் செலுத்தும் P2M பரிவர்த்தனைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட தொகைக்கு மட்டும் 0.4% கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தக் கட்டண விதிமுறை குறித்த தகவலை NPCI அல்லது சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.




கருத்துகள் (0)