சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
உலகம்

கைதிகளுடன் நெருக்கம், புகைப்படங்கள் எடுத்ததால் சிறை அதிகாரி பணிநீக்கம்!

கைதிகளுடன் நெருக்கம், புகைப்படங்கள் எடுத்ததால் சிறை அதிகாரி பணிநீக்கம்!

 

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறை அதிகாரியாகப் பணியாற்றிய கார்லா பெல்ட்ரான், கைதிகளுடன் அளவுக்கு அதிகமாக நெருக்கமாகப் பழகியதாகவும், அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படும் விவகாரத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 1ஆம் தேதி பணியில் சேர்ந்த அவர், சிறைவாசிகளுடன் நட்பாகப் பழகி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தச் செயல்பாடுகள் சிறை நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பணியில் சேர்ந்த 100 நாட்களுக்குள்ளேயே கார்லா பெல்ட்ரான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறை அதிகாரிகள் கைதிகளுடன் பழகும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தொழில்முறை எல்லைகள் குறித்த விவாதத்தையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.