சனி, நவம்பர் 07, 2026
உண்மையின் குரல்
உலகம்

இங்கிலாந்தில் இணைய ஆபாசத் தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நவம்பர் 6 முதல் அமல்!

இங்கிலாந்தில் இணைய ஆபாசத் தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நவம்பர் 6 முதல் அமல்!

 

 

இங்கிலாந்தில் இணைய ஆபாசத் தளங்களில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான பாலியல் காட்சிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாலியல் செயல்பாட்டின்போது கழுத்தை நெரித்தல் போன்ற வன்முறைகளைச் சித்தரிக்கும் காட்சிகளுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டம் நவம்பர் 6 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இத்தகைய காட்சிகள் இளைஞர்களின் புரிதல் மற்றும் உறவுகள் குறித்த பார்வையில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், குறிப்பாக இளைஞர்களைப் பாதிக்கக்கூடிய வன்முறைக் காட்சிகளின் பரவலைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.