வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

குடும்பத் தகராறு.. மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.. போலீசார் தேடுதல் வேட்டை!

குடும்பத் தகராறு.. மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.. போலீசார் தேடுதல் வேட்டை!

தேனி மாவட்டம் கூடலூரில் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கூடலூரைச் சேர்ந்த சிங்கத்துரை (47) என்பவருக்கும், அவரது மனைவி பிரியங்கா (35) என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு மேல் தாமதமாக வீட்டிற்கு வந்த பிரியங்காவிடம் சிங்கத்துரை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிங்கத்துரை தனது மனைவி பிரியங்காவை கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பிரியங்கா உயிரிழந்தார். மனைவியை கொலை செய்துவிட்டு சிங்கத்துரை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய சிங்கத்துரையை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.