திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பாரம்பரிய கறி விருந்து! 5,000 பேர் பங்கேற்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பாரம்பரிய கறி விருந்து! 5,000 பேர் பங்கேற்பு!

 

 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் புகழ்பெற்ற எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரியக் கறி விருந்து நடைபெற்றது. அம்மனுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்தப்பட்ட 38 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டு, அவற்றின் இறைச்சியைக் கொண்டு கறிக்குழம்பு தயாரிக்கப்பட்டது. இரவு முழுவதும் நடைபெற்ற சமையல் பணிகளுக்குப் பிறகு, கறிக்குழம்பும் சாதமும் அம்மனுக்குப் படையலிட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

 

இந்தத் திருவிழாவில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், 5,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அம்மனுக்குப் படையலிட்ட உணவைப் பகிர்ந்து உண்ணும் பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்றவர்கள் கறி விருந்தை உண்டு மகிழ்ந்தனர். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த வழிபாட்டு முறை, அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.