திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் அக்டோபர் 15 முதல் மழைக்காலம் தொடங்க வாய்ப்பு! வானிலை மையம் கணிப்பு!

தமிழகத்தில் அக்டோபர் 15 முதல் மழைக்காலம் தொடங்க வாய்ப்பு! வானிலை மையம் கணிப்பு!

 

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கிடையே, அடுத்த 2 முதல் 3 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்திற்கு அதிகளவிலான மழைப்பொழிவை வழங்கும் வடகிழக்கு பருவமழை, குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரவும் இந்த மழை உதவுகிறது. எனவே, பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.