“நாங்கள் என்ன திருடினோமா?” – சென்னையில் போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்கள் கைது!

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று (அக். 12) போராட்டத்தில் ஈடுபட்ட பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறி, போராட்டத்தில் இருந்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட பணியாளர்களைப் பேருந்தில் ஏற்றிச் சென்றபோது, பெண் பணியாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். “நாங்கள் என்ன திருடினோமா? எதற்காக போலீசார் எங்களை அடிக்கிறார்கள்? எது நடந்தாலும் கைதுதானா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடிய தங்களை நடத்தும் விதம் குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மருத்துவப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பான விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)