திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய 3 அரசுப் பேருந்துகள்.. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய 3 அரசுப் பேருந்துகள்.. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழிச்சாலையில் இன்று (நவம்பர் 2) மூன்று அரசுப் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்துகளின் முன்பக்கங்கள் சேதமடைந்தன.

 

இருப்பினும், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.