கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சென்னை பெரம்பூர் – பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை பெரம்பூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, தாழ்வான பகுதிகளிலும் முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆங்காங்கே பழுதடைந்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மழைநீரில் தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மழைநீர் தேங்கியுள்ள சாலைகளைக் கடந்து செல்ல முடியாமல் பாதசாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து நீடிக்கும் மழைநீர் தேக்கத்தால் அப்பகுதி மக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)