ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

பெருங்குடியில் தவெக நிர்வாகியின் 5 மாடிக் கட்டிடம் இடிக்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்!

பெருங்குடியில் தவெக நிர்வாகியின் 5 மாடிக் கட்டிடம் இடிக்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்!

 

 

சென்னையை அடுத்த பெருங்குடியில், கிராம நத்தம் நிலத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி ஆர். கார்த்திக்கின் ஐந்து மாடி வணிகக் கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக திருவொற்றியூரைச் சேர்ந்த கே. விமல் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மாநகராட்சி அளித்த பதிலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கட்டிடத்தை இடிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி நீதிமன்றத்தில் அளித்த தகவலே இந்த வழக்கில் முக்கிய அம்சமாக அமைந்தது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.